கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்துவருகிறது. எடியூரப்பா அம்மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார். 2023ஆம் ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் கட்சிக்குள் உட்கட்சி பூசல் எழுந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் யார் என்பது குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் ஒழுங்காற்று குழு சார்பில் குழு தலைவர் ரஹ்மான் கான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை கட்சித் தலைவருமான சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் பெயர்கள் அடிபட்டதையடுத்து, இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழும்போது இதுகுறித்து விவாதிக்கலாம், அதுவரை நமது மாநிலத்தின் நலனுக்காக கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் கட்சி தொண்டர்களும், தலைவர்களும் செயல்பட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியினர்: டி.கே. சிவகுமார் கடும் தாக்கு