மத்திய பிரதேசம்: இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பின் 6ஆவது தளத்தில் இருந்து நாய் ஒன்று தூக்கி வீசப்பட்டு கொல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் இந்தூரில் உள்ள லசுடியா காவல் நிலையப் பகுதியில் நடத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘பீப்புள் ஃபார் அனிமல்ஸ்’ அமைப்பின் விலங்கு ஆர்வலர் பியான்ஷு ஜெயின், லசுடியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், அடையாளம் தெரியாத சிலர் நாய் ஒன்றை தாக்கி அதனை குடியிருப்பின் 6ஆவது தளத்தில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் பல திடிக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, இந்த சம்பவம் போல், ஏரோட்ரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஆண்டு நாய் மீது காரை ஏற்றி கொன்றுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் போபபாலில் நாய் ஒன்றை குளத்தில் வீசி கொல்வதும், அன்னப் பறவையை கொல்வதும் போன்ற விலங்குகளை சித்திரவதை செய்யும் பல சிசிடிவி காட்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல காட்சிகள் வெளியாகி வைரலாகியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Honour Killing: காதலை கைவிட மறுப்பு.. மருத்துவ மாணவி ஆணவக் கொலை!