ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சின்ன ஹைதராபாத் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா (20) மே 7ஆம் தேதி அன்று விரதம் இருந்ததால், மயங்கி விழுந்துள்ளார். இதனால், அவரது கணவர் ஜாஹிராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக் உறுதி செய்து சான்று ஒன்றை கொடுத்துள்ளார்.
இதில் நம்பிக்கை இல்லாத குடும்பத்தார், அர்ச்சனாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு குணமடைந்தார்.
இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தார் கூறுகையில், "அரசு மருத்துவரின் அலட்சியத்தால் எங்களது பெண்ணை இழக்க நேரிட்டிருக்கும். அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த பிறகு அந்த அரசு மருத்துவமனையில் முறையிட்டோம். ஆனால் பதிவேட்டில் அர்ச்சனா இறந்துவிட்டதாக எழுதியிருந்த பக்கத்தில் கிழித்துவிட்டு புதிய பக்கத்தை ஒட்டிவிட்டனர். அதோடு வேறு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுவிட்டனர்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "இத கேக்க நீ யாரு..?" Swiggy ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர்