ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள கர்தானி காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (ஆகஸ்ட் 12) பெண் ஒருவர் மருத்துவர் மீது புகார் அளித்தார். அப்பெண் அளித்த புகாரில், ‘ சிகிச்சைக்கு சென்ற மருத்துவர் ஒருவர், தனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக’ தெரிவித்து இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 27 அன்று இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச்சென்றுள்ளார். அங்கு மருத்துவர் அப்பெண்ணுக்கு குடிப்பதற்குப் பானம் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்த பெண்ணை அந்த மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது குறித்து கர்தானி காவல் நிலைய அலுவலர் பிஎல் மீனா கூறுகையில், ’’பாதிக்கப்பட்ட இளம்பெண் சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச்சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது’’ எனக் கூறினார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு