ETV Bharat / bharat

'மக்கள் தீர்ப்பை மாசுபடுத்த வேண்டாம்’ - அமைச்சர் துரைமுருகன்

நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 33ஆக உயர்த்தி, மக்கள் அளித்த தீர்ப்பை ஒன்றிய அரசு மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்
author img

By

Published : May 12, 2021, 2:33 PM IST

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து - அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். “30 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டது தான் புதுச்சேரி சட்டப்பேரவை” எனத் தெளிவாக இருக்கின்ற நிலையில் - சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்.எல்.ஏக்கள் மூலம் 33ஆக உயர்த்தி - மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்னும் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதலமைச்சரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை ஒன்றிய அரசு செய்து பா.ஜ.க.வின் எண்ணிக்கையை 9-ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்.எல்.ஏக்களின் பலத்தை வைத்துச் சீர்குலைத்து - கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. செய்யும் முயற்சியே அது என்ற சந்தேகம் புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த மூன்று நியமன எம்.எல்.ஏக்கள் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும்.

நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு புதுச்சேரி மக்களின் நலனிலும் மாநிலத்தில் நிலவும் கரோனா பரவலைத் தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.