ETV Bharat / bharat

திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம்
திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம்
author img

By

Published : Oct 21, 2022, 11:59 AM IST

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்.17ஆம் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் (அக்.19) வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேநேரம் எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றிருந்தார். அக்.26ஆம் தேதி மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்க உள்ளார்.

இதனிடையே திமுகவின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. அந்த கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘திமுக பொதுக்குழுவில் மனம் வெம்பி பயத்துடனே முதலமைச்சர் பேசியுள்ளார்’ - செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.