ETV Bharat / bharat

புதுச்சேரியில் காங்கிரஸ் 15; திமுக 13 இல் போட்டி! - திமுக

புதுச்சேரி: சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் திமுக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

congress dmk
congress dmk
author img

By

Published : Mar 11, 2021, 7:31 PM IST

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்து, அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேசினர்.

அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 13 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுவதென ஒப்பந்தம் கையெழுத்தானது. எஞ்சியுள்ள இரண்டு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும், காங்கிரஸ் திமுக கூட்டணி அமைத்து இங்கு போட்டியிட்டன. அப்போது காங்கிரஸ் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 15ம், 9ல் போட்டியிட்ட திமுக இரண்டு தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பாஜக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.