டெல்லி: மேற்குவங்க சட்டபேரவை தேர்தலில் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து, மாபெரும் வெற்றி பெற்றுத் தந்தார். இதனால் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்து உள்ளார்.
சரத்பவார் - பிகே ஆலோசனை
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோரை சந்தித்து சரத்பவார் ஆலோசனை நடத்தினார். நேற்று (ஜுன் 21) இரவும் டெல்லியில் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மாற்று கட்சிகளுக்கு அழைப்பு
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அல்லாத அணிகள் தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும், நடப்பு அரசியல் குறித்து விவாதிக்க மாற்று கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் திமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து உள்ளார்.
ஒருங்கிணைப்பது யார்?
இக்கூட்டத்தை, சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த யஷ்வந்த் சின்கா ஒருங்கிணைந்து உள்ளார், அவரது ராஷ்ரிய மஞ்ச் அமைப்பு கூட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
இதுகுறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேல், மூன்றாவது அணி சார்பில் கூட்டம் நடைபெறவில்லை. அரசியல் நிகழ்வு குறித்து ஆலோசிப்பதற்காக மட்டுமே கூட்டம் நடைபெற்றதாக விளக்கம் அளித்துள்ளார்.