ETV Bharat / bharat

"இனி நாடாளுமன்றம் அமைதியாக நடக்கும்.. அதுவும் பாஜக எம்.பிக்களை பொறுத்து தான்" - டி.ஆர் பாலு! - Rajya Sabha MP Suspension issue in tamil

நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளது என்றும் திமுக மக்களவை தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்து உள்ளார்.

திமுக எம்பி டி ஆர் பாலு
DMK MP TR Balu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 7:43 PM IST

டெல்லி : கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து இருவர் களேபரத்தில் ஈடுபட்டனர்.

அந்த இரண்டு பேரையும் பிடித்து எம்.பிக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியில் பாதுகாப்பு குளறுபடியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், அடுத்தடுத்து இரண்டு பேரை கைது செய்தனர்.

6 பேரும் சட்டவிரோத தடுப்பு உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக சிஆர்பிஎப், டி.ஜி அனிஷ் தயால் சிங் தலைமையில் சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் ஓம் பிர்லா மறு உத்தரவு வரும் வரை மக்களவை பார்வையாளர்கள் பகுதியில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார். இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதினார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மீண்டும் அவை கூடிய நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 13 மக்களவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் என மொத்தம் 14 பேர் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்றைய (டிச. 18) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்களவையில் 33 எம்.பிக்களும், மாநிலங்களைவையில் 45 எம்.பிக்களும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் மக்களவையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், திரிணாமூல் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி, சுகதா ராய் உள்பட 31 பேர் நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், கே.ஜெயகுமார், அப்துக் காலிக் ஆகியோர் சபாநாயகர் இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டதாக முன்னுரிமைக் குழுவின் அறிக்கை வரும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து மாநிலங்களவையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி வேணுகோபால், ரந்தீப் சுர்ஜெவாலா உள்ளிட்ட 45 எம்.பிக்கள் நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் 34 எம்.பிக்கள் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள 11 பேர் முன்னுரிமை குழுவின் விசாரணை அறிக்கை வரும் வரை இடை நீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 3 மாதங்களுக்குள் முன்னுரிமை குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற இடைநீக்கம் குறித்து பேசிய நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர் பாலு, இன்று (டிச்அ. 18) மக்களவையில் 33 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இனி அவை அமைதியான முறையில் நடைபெறும் அதுவும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையை பொறுத்து தான் என்று கூறினார்.

மேலும் அவர், நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு எம்.பிக்கள் இடைநீக்க நிகழ்வு நடந்தது இல்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளது என்றும் டி.ஆர். பாலு எம்.பி கூறினார்.

இதையும் படிங்க : "ஜனநாயக நெறிமுறைகள் குப்பையில் வீசப்பட்டு உள்ளன" - மல்லிகார்ஜூன கார்கே காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.