ETV Bharat / bharat

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி கண்டன முழக்கம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள் - Puducherry budget presentation

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் சீருடை வழங்காததை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளி சீருடையுடன் சைக்கிளில் வந்து சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி கண்டன முழக்கம் எழுப்பினர்.

திமுக எம்.பிக்கள் வாக்குவாதம்
திமுக எம்.பிக்கள் வாக்குவாதம்
author img

By

Published : Feb 3, 2023, 10:22 PM IST

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி கண்டன முழக்கம் எழுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள்

புதுவை: புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது, சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளைத் தொடங்கினார்.

முதலாவதாக சபையில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரியும், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் மாநில அந்தஸ்து விவாகரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தினார்.

தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில், இது குறித்து பேரவையில் பேச மறுத்ததாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசை கண்டித்தும் பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் பேரவையை கால வரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார், சபாநாயகர் செல்வம். பேரவை தொடங்கி 25 நிமிடங்களில் பேரவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்கூல் யூனிபார்மில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.. புதுச்சேரியில் நடந்தது என்ன?

முன்னதாக புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக சீருடை, புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை அரசு வழங்கிட வலியுறுத்தியும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பள்ளி சீருடை அணிந்து, அடையாள அட்டையுடன் பையை மாட்டிக் கொண்டு சைக்கிளில் சட்டப்பேரவை வந்தனர். மேலும், சீருடை மற்றும் பையை மாட்டிக் கொண்டு சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்பதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் பேரவை நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, "பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சீருடை வழங்க வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற, திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் குரல்கொடுக்க, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்படும்" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 13 ஈர நிலங்கள் கண்டறியபட்டுள்ளது: அமைச்சர் மதிவேந்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.