சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ். ராசா, அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இரு கட்சியினரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பிறகு, தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என தெரிவித்தார்.