ETV Bharat / bharat

'ரவுடிகள் துணையோடு ஓட்டுக்கு ரூ.1000 விநியோகம் செய்த திமுக!'

புதுச்சேரி: ரவுடிகள் துணையோடு திமுக ஆங்காங்கே வாக்குக்கு ரூ.1000 பணம் விநியோகம் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என அதிமுக வேட்பாளர் அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.

ரவுடிகள் துணையோடு ஓட்டுக்கு ரூ. 1000 பணம் விநியோகம் செய்த திமுக

author img

By

Published : Mar 27, 2021, 9:39 PM IST

புதுச்சேரி கிழக்கு மாநில கழகச் செயலாளரும், உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான அன்பழகன் எம்எல்ஏ இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் – திமுக கூட்டணி எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாததால் வருகிற தேர்தலில், ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு இணக்கமான ஆட்சி இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும். மத்தியிலிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதிமுக, என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டுவர மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் உப்பளத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர், தோல்வி பயத்தில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூறி காவல் துறையின் துணையோடு, அதிமுக தொண்டர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையில் புகாரளிக்காமல், நேற்று (மார்ச் 26) அம்பேத்கர் சாலையிலுள்ள சர்ச் எதிரில் புனித பாதை திருவிழா நடைபெறும் நேரத்தில் மலிவு விளம்பரத்துக்கு, திமுக வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால் கிறிஸ்தவ சமுதாய மக்கள் விழாவில் சரியான முறையில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாக்கினார். திமுக வேட்பாளரே ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தினராக இருந்துகொண்டு இந்தத் தவறை செய்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் சட்டத்திற்கு விரோதமாக நூற்றுக்கணக்கானோருடன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக வேட்பாளர் அன்பழகன்
அதிமுக வேட்பாளர் அன்பழகன்
இன்றைய தினம் உப்பளம் தொகுதியில், திமுகவைச் சேர்ந்தவர்கள் ரவுடிகள் துணையோடு ஆங்காங்கே வாக்குக்கு ரூ.1000 பணம் விநியோகம் செய்துள்ளனர்.
இதனை காவல் துறையும் கேட்பதில்லை. தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களே பணம் விநியோகிப்பவரைப் பிடித்துக் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.