ETV Bharat / bharat

உனக்காக பொறந்தேனே.. 52 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து - 85 வயதில் இணைந்த தம்பதி! - karnataka joins

52 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற தம்பதியினர், தங்களுக்கு 80 வயதைத் தாண்டிய பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர்.

உனக்காக பொறந்தேனே.. 52 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து - 85 வயதில் இணைந்த தம்பதி!

author img

By

Published : Jun 27, 2022, 6:37 PM IST

ஹூபளி (கர்நாடகா): கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்தில் உள்ள கலகதகி தாலுகாவில் இருக்கும் ஜின்னூர் கிராமத்தில், பசப்பா அகடி - கல்லாவா அகடி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், 52 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவர் பசப்பா அகடி, மாதந்தோறும் அவரது விவாகரத்தான மனைவி கல்லாவுக்கு ஜீவனாம்சம் வழங்கி வந்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக பசப்பா, கல்லாவுக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதனால் மீண்டும் கல்லாவா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் மூத்த திவானி நீதிமன்றம், தேசிய மெகா-லோக் அதாலத்தில் வழக்கை நடத்த முடிவு செய்தது. ஜீவனாம்சம் செலுத்தத் தவறிய பசப்பா அகடிக்கும் நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

அப்போது, நீதிமன்றத்தில் வயதான தம்பதியரை பார்த்த நீதிபதி ஜி.ஆர்.ஷெட்டர் ஆச்சரியமடைந்தார். காரணம், கணவர் பசப்பா அகடிக்கு வயது 85; மனைவி கல்லாவா அகடிக்கு வயது 80. தொடர்ந்து, நீதிபதி இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை இணைந்து வாழச்செய்தார்.

மேலும், மைசூர் நகர மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், 1,50,633 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 70,281 சமரசம் செய்யப்பட்டுள்ளன. இதில் 52,695 சமரச வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 38,385 வழக்குகள் மற்றும் 37,177 முன் வழக்குகள் உள்பட மொத்தம் 75,562 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த முறை தேசிய லோக் அதாலத்தில் குடும்பத் தகராறு தொடர்பான வழக்கில் மைசூர் நகரம் மற்றும் மைசூர் தாலுகா நீதிமன்றங்களில், மொத்தம் 38 தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘மத்திய அரசின் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்புங்க' எனப்பேசி மோசடி செய்த போலி ஆசாமி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.