ETV Bharat / bharat

மீண்டும் உருவெடுக்கும் கரோனா: புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்!

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனவும் ஒரு சில விதிமுறைகளையும் கூறி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தொற்று அதிகரிப்பால் முக கவசம் கட்டாயம்

author img

By

Published : Apr 7, 2023, 8:34 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் இன்று ( ஏப்.07 ) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த சில வாரங்களாக கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக காரைக்காலில் 3 தினங்களுக்கு முன்பு ஒரு உயிர் உயிரிழந்தார்.

இதனால், புதுச்சேரியில் தினமும் பரிசோதிக்க கூடிய நோயாளிகளில் 15 விழுக்காடு பேர் தொற்று உறுதி செய்யப்படுவதாக கூறினார். எனவே நோய்தொற்றை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், அதன்படி மக்கள் அதிகம் கூடும் சன்டே மார்க்கட், கடற்கரை சாலை, மால், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், பார், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய முக்கிய பொது இடங்களில் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் வல்லவன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு ஏற்கனவே தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் படி பள்ளிகள் இயங்கும் என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு பொருந்தும் என கூறிய அவர், தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் மக்கள் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தி இந்த சூழ்நிலையை தடுக்கப் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: Corona virus: சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி.. அதிகரிக்கும் கரோனாவால் மாநகராட்சி அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.