ETV Bharat / bharat

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - Collector Purva Garg

புதுச்சேரியில் மொத்தமுள்ள 8,37,516 வாக்காளர்கள் வேண்டிய திருத்தங்களைச் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பூர்வா கார்க்
புதுச்சேரி, மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Nov 2, 2021, 2:40 PM IST

புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2022-யை தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நேற்று (நவ.1) தொடங்கியுள்ளன.

மாவட்ட ஆட்சியர் - மேற்பார்வை

இப்பணிகள் 2022 ஆம் ஆண்டு ஜன. 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நவ. 01 ஆம் தேதி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூர்வா கார்க் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டிலை வெளியிட்டார்.

வெளியிட்ட மாவட்ட ஆட்சியர், பூர்வா கார்க்
வரைவு வாக்காளர் பட்டியலை

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாவட்டத்துக்கான (மாகே மற்றும் ஏனாம் உட்பட) வரைவு வாக்காளர் பட்டியலில் 3,95,226 ஆண் வாக்காளர்கள், 4,42,193 பெண் வாக்காளர்கள், 97 மாற்று பாலின வாக்காளர்கள் என்று மொத்தம் 8,37,516 வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தங்கள் செய்யலாம்

இந்த வரைவு வாக்காளர் பட்டியல், முன்னோட்டமாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்வதற்கான காலம் இன்று நவ. 01 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பணியில் இருக்கும் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர், அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருப்பதுடன் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் குறித்த படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

வாக்காளர்கள், தங்களின் வாக்குச்சாவடிக்கு சென்று பெயர், விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் நூலகம்....!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.