ஜம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமாக ஸ்டீல் தொழிற்சாலை உள்ளது. டாடா ஸ்டீல்ஸ் நிர்வாகம் கடந்த 1997-98 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை குத்தகை பாக்கி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த காலத்திற்கு டாடா நிறுவனம் ஏறத்தாழ ரூ.744 கோடி குத்தகை தொகை செலுத்த வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கிழக்கு சிங்பூம் மாவட்ட நிர்வாகம், நிலுவையில் உள்ள குத்தகை தொகையை செலுத்துமாறு டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், பொது கோரிக்கை மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜம்ஷ்ட்பூர் நகரில் உள்ள சைரத் மார்க்கெட் பகுதியையும் டாடா ஸ்டீல் நிறுவனம் நிர்வகித்து வருவதாகவும், அதற்கும் கடந்த பல ஆண்டுகளாக குத்தகை தொகை வழங்கப்பட வில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த இடத்திற்கு குத்தகை தொகை 17 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள நிலையில் அதையும் செலுத்துமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: India: The Modi Questions: பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசி தொடர் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி..