ETV Bharat / bharat

layoffs: டிஸ்னியில் 7,000, ஜூமில் 1,300 ஊழியர்கள் பணிநீக்கம்! - Layoff in disney

உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் பணியாற்றும் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டிஸ்னி தெரிவித்துள்ளது.

டிஸ்னி
டிஸ்னி
author img

By

Published : Feb 9, 2023, 11:14 AM IST

கலிபோர்னியா: கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முதலே பெரும் பொருளாதார பேரிழப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நிதி நிலையைச் சுட்டிக் காட்டி டிவிட்டர் தொடங்கி பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் பணி நீக்கத்தைச் செய்து வருகின்றன. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதும், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணியிலிருந்து தூக்கிப் பணி நீக்க கலாச்சாரத்தைப் பெரியளவில் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள், அமெசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பணியாளர் நீக்கத்தை கையில் தூக்கின. இந்த முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது உலகின் முன்னணி கேளிக்கை நிறுவனமான டிஸ்னியும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ஏறத்தாழ 7 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இந்த நீக்கம் இருக்காது என்றும், உலகம் முழுவதும் உள்ள டிஸ்னி கிளைகளிலிருந்து 7 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊடகத் துறையில் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மையற்ற சூழல், பல மில்லியன் டாலர் செலவு குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பணியாளர் நீக்கத்தை கையில் எடுத்துள்ளதாக டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் உள்ள நிலையில், அதில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் அமெரிக்காவில் பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஓட்டு மொத்தமாக 7 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் உள்ள டிஸ்னி கிளைகளில் பணியாற்றும் 3 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் டிஸ்னி நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவை காரணம் காட்டி பங்குதாரர்களுக்கு ரிவார்ட்ஸ் வழங்கும் திட்டத்தை டிஸ்னி நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க உள்ளதாக டிஸ்னி தலைமை செயல் அதிகாரி பாப் இகர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் 32 ஆயிரம் ஊழியர்களை டிஸ்னி பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், 5 புள்ளி 5 பில்லியன் டாலர் செலவை குறைக்க 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 2 புள்ளி 5 பில்லியன் டாலர் செலவு மிச்சப்படும் என பாப் இகர் தெரிவித்தார்.

அதேபோல் சாப்டவர் நிறுவனமான ஷூம்(Zoom), ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளது. கரோனாவுக்கு பின் வீடியோ கான்பிரன்சிங் தொழில்நுட்பத்தை தேவை குறைந்ததன் காரணமாக இந்த பணியாளர் நீக்கம் அரங்கேறியுள்ளதாகவும், ஒட்டுமொத்த ஊழியர்களில் 15 சதவீதம் பேர் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆட்குறைப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்த ஷூம் காணொலி தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி எரிக் யுவன், ஊதியத்தில் 98 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக கூறினார். 1 புள்ளி 1 மில்லியன் டாலர் சம்பளத்தில் 98 சதவீதம் பிடித்தம் போக 6 ஆயிரத்து 34 டாலரை சம்பளமாக எரிக் யுவன் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: துருக்கி, சிரியாவில் 15,000-ஐ கடந்த உயிர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.