பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து ஜம்மு காஷ்மீரின் "குப்கர் கூட்டணி" அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டணியில் செய்தித்தொடர்பாளர் யூசுப் டரிகாமி இவ்வறிக்கையினை வெளியிட்டார்.
அதில், 'குப்கர் கூட்டணியில் உள்ள அனைத்துத் தலைவர்களும் டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கைதிகளை விடுதலை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை
காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்து, அங்கு நிலைமையைச் சீர்செய்யும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்வில்லை.
ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கிய பின்னரே தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் பாஜக அரசு வழங்கிய வார்த்தையை நிறைவேற்ற வேண்டும்' என அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் முன்னணிக் கட்சிகள் இணைந்து "குப்கர் கூட்டணி"-ஐ 2019ஆம் ஆண்டு உருவாக்கின.
காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் இந்த கூட்டணி உருவானது.
இதையும் படிங்க: நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இல்லை - பாஜக குறித்து சிவசேனா