ஹைதராபாத்: டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கு, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா வந்திருந்தார். அப்போது, அவர் ஒரு முன்னணி இணையதள செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது, தங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய திரைப்படத்தை கூறுமாறு நெறியாளர் கேள்வி கேட்டார்.
உடனே லூலூ, தனக்கு ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படம் பிடிக்கும் என பதில் அளித்தார். மேலும், “மூன்று மணிநேரம் இருக்கக் கூடிய இந்த படத்தில் அழகான நடனம், நகைச்சுவை, பாடல் என அனைத்தும் அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இந்தியா இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
Sir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo
">Sir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXoSir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo
அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். யாரிடம் சென்று RRR படம் குறித்து கேட்டாலும் பிடித்திருக்கிறது என்றும் நடனம், பாடல், நடிப்பு என அனைத்து நன்றாக அமைந்திருப்பதாக தெரிவித்தனர். ஆகையால், எனது மனதை கவர்ந்து இழுத்த இந்த படத்தின் நடிகர்கள், இயக்குநருக்கு எனது வாழ்த்துகள்.
இந்த படத்தில்,1920களில் இரண்டு நிஜ வாழ்க்கை இந்திய புரட்சியாளர்களான அல்லூரி சீதாராம ராஜு (ராம் சரண்) மற்றும் கொமரம் பீம் (ஜூனியர் என்டிஆர்) ஆகியோரது பின்னணிக் கதையை வெளிக்காட்டுகிறது. உலகளவில் 1,200 கோடி ரூபாய் வசூலித்த இப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘நாட்டு நாடு’ என்ற தெலுங்கு பாடலுக்காக சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதையும் வென்றது” என தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை, ஜி 20 தலைவர் பதவியை மாற்றுவதைக் குறிக்கும் வகையில் சம்பிரதாயத்தை லூலாவிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். பிரேசில் இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உயரடுக்கு குழுவின் தலைவர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “ஆக்கிரமித்த நிலத்தை மீட்பது எனக்கு புதிது கிடையாது” ... 'மார்க் ஆண்டனி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு!