ETV Bharat / bharat

ராமர் கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூல்: பாஜகவை விமர்சிக்கும் திக்விஜய் சிங்!

பாஜக யாருடைய அனுமதியுடன், ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூல்செய்கிறது? கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடைகளை வசூலிக்க, ராமர் கோயில் அறக்கட்டளை பாஜகவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதா? என காங்கிரசின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

author img

By

Published : Jan 28, 2021, 4:28 PM IST

உஜ்ஜைன்: காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங், ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக நன்கொடை வசூலிப்பது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

உஜ்ஜைன் மாவட்டம், நாக்தாவில், ஈடிவி பாரத்திடம் பேசிய திக்விஜய் சிங், யாருடைய அனுமதியுடன் ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக நன்கொடை வசூல்செய்கிறது. கோயில் கட்டுமானத்திற்கான நன்கொடை வசூலிக்க ராமர் கோயில் அறக்கட்டளை அனுமதி வழங்கியுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

நன்கொடை வசூலிக்க அணியணியாகத் திரண்டுவரும் காவி கட்சியினர், லத்திகள், வாள்கள் ஏந்தி நன்கொடை வசூல்செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

நாக்தாவில் பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சிலை நிறுவப்படாதது குறித்து பேசிய அவர், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சிலை நிறுவப்படாவிட்டால், நாக்தாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, திக்விஜய் சிங், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 111 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.