மத்தியப்பிரதேசம்: காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பேச்சை திரித்து, அவரைப்பற்றி அவதூறு பரப்பியதாக, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுதொடர்பாக போபால் காவல்துறை ஆணையருக்கு, திக்விஜய் சிங் எழுதியிருந்த புகார் கடிதத்தில், " கடந்த 2019-ம் ஆண்டு மே 16-ம் தேதி, சிவ்ராஜ் சிங் சவுகான் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் ராகுல்காந்தியின் பேச்சு திரித்துக் காண்பிக்கப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் இந்த நடவடிக்கையில் சிவ்ராஜ் சிங் சவுகான் ஈடுபட்டுள்ளார்''என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுக்கும் சிங் காரதாவை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளதாகவும், இதுபோன்ற புனையப்பட்ட தகவல்கள் மூலம் காங்கிரஸ் தலைவர்களின் நற்பெயரை கெடுக்க முயற்சித்ததற்காக, சிவ்ராஜ்சிங் சவுகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், புனையப்படாத உண்மையான வீடியோ ஆதாரத்தை, பென்டிரைவில் பதிவு செய்து இக்கடிதத்துடன் அனுப்பியிருப்பதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.
-
मैंने शिवराज जी द्वारा इस झूठे फेक विडियो अपने ट्विटर पर चलाने के आधार पर उनके ऊपर क़ानूनी कार्रवाई करने की मॉंग की है।
— digvijaya singh (@digvijaya_28) April 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
@INCMP
@BJP4MP
@INCIndia
@BJP4India pic.twitter.com/8ipQkjP03P
">मैंने शिवराज जी द्वारा इस झूठे फेक विडियो अपने ट्विटर पर चलाने के आधार पर उनके ऊपर क़ानूनी कार्रवाई करने की मॉंग की है।
— digvijaya singh (@digvijaya_28) April 12, 2022
@INCMP
@BJP4MP
@INCIndia
@BJP4India pic.twitter.com/8ipQkjP03Pमैंने शिवराज जी द्वारा इस झूठे फेक विडियो अपने ट्विटर पर चलाने के आधार पर उनके ऊपर क़ानूनी कार्रवाई करने की मॉंग की है।
— digvijaya singh (@digvijaya_28) April 12, 2022
@INCMP
@BJP4MP
@INCIndia
@BJP4India pic.twitter.com/8ipQkjP03P
ராகுல்காந்தியின் திரிக்கப்பட்ட வீடியோவையும், உண்மையான வீடியோவையும் ஒப்பிட்டு தனது ட்விட்டரில் திக்விஜய் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், திக்விஜய் சிங் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோனில் ராம நவமியின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக, மதப்பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் குவாலியர், ஜபல்பூர், நர்மதாபுரம், சாட்னா ஆகிய 4 இடங்களில் திக் விஜய் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திக்விஜய் சிங் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தனது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, தன் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். இதுதான் பாஜக மாடலின் ஜனநாயகமா? தன் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீசார், பாஜகவினரின் மத வெறுப்பு பேச்சுகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்றும் கேள்வி எழுப்பினார்.