ETV Bharat / bharat

Rajya Sabha: கடலோர மீன்வளர்ப்பு ஆணைய மசோதா உள்ளிட்ட 6 முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்!

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்டியல் சாதிகள் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணைய மசோதா உள்ளிட்ட ஆறு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Digital personal
கோப்பு
author img

By

Published : Aug 9, 2023, 4:34 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு வந்தன. மணிப்பூர் விவகாரம், ராகுல்காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டாலும், மறுபுறம் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.

கடந்த 26ஆம் தேதி, சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா, பிஞ்சியா ஆகிய சமூகங்களை எஸ்டி (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அன்றைக்கே மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.

கடந்த 7ஆம் தேதி, டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற மாநிலங்களவையில் முக்கியமான ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்டியல் சாதிகள் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, மருந்தக திருத்தச் சட்ட மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணைய மசோதா, ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் மசோதா ஆகிய ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்கள் அனைத்தும் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்டியல் சாதிகள் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, சத்தீஸ்கரில் உள்ள மஹாரா மற்றும் மஹ்ரா சமூகங்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வழி செய்கிறது. இந்த மசோதா கடந்த 1ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா கடந்த 7ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. டிஜிட்டல் இணையதளங்களில் சட்டத்திற்குட்பட்டு தனிநபர் தகவல்களை பயன்படுத்த அனுமதி அளிக்கவும், அதே நேரத்தில் தனிநபரின் தரவுகள் மீதான அவரது உரிமையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த மசோதா உருவாக்கப்பட்டது. தனிநபர் ஒருவரின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஏறத்தாழ 250 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்க இந்த மசோதா வழி செய்கிறது.

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்கான தேசிய அறக்கட்டளையை அமைக்க வழி செய்கிறது. இந்த மசோதாவும் கடந்த 7ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியது. அதேபோல், கடலோர மீன்வளர்ப்பு ஆணைய மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005-ல் திருத்தம் செய்கிறது. கடலோர மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் இந்த மசோதா, சுற்றுச்சூழலை விட வணிக ரீதியாக வளர்ச்சிக்கு மட்டுமே வழி செய்வதாக தெரிகிறது.

ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் மசோதா, வழக்கற்றுப் போன மற்றும் தேவையற்றதாக கருதப்படும் 65 சட்டங்களை ரத்து செய்ய வழி செய்கிறது. இந்த முக்கிய மசோதாக்கள் விரைவில் மாநிலங்களவையில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Explained: நாடாளுமன்றத்தில் நிறைவேறிய டெல்லி நிர்வாக திருத்த மசோதா : அதிகாரம் தொடர்பான முக்கிய அம்சங்கள்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.