ETV Bharat / bharat

பிகாருக்கு 'டிஜிட்டல் இந்தியா விருது' வழங்கி கௌரவித்த குடியரசுத் தலைவர்

நடப்பு ஆண்டிற்கான 'டிஜிட்டல் இந்தியா 2020' விருதினை பிகார் மாநிலத்திற்கு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்துள்ளார்.

Digital India award function
Digital India award function
author img

By

Published : Dec 30, 2020, 5:28 PM IST

டெல்லி: புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் டிஜிட்டல் இந்தியா விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் டிஜிட்டல் இந்தியா விருதிற்கு பிகார் மாநில அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அம்மாநிலத்தின் பேரிடர் கால விநியோக இணையதளங்களின் செயல்பாட்டை பாராட்டும் வகையிலும், கரோனா காலத்தில் டிஜிட்டல் முறை மூலம் பிகார் மாநில மக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தி நடவடிக்கை எடுத்ததற்காகவும் இந்த விருது அறிவிக்கப்பட்டது. பிகாரில் மொபைல் செயலியின் மூலம் 21 லட்சம் மக்களுக்குக்கு நிதியுதவியும், ஒரு கோடியே 64 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என மூன்று மாதங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

காணொலி காட்சி வாயிலாக இன்று (டிச.30) நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா 2020 விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, பிகார் மாநிலத்தின் சார்பாக பங்கேற்ற அம்மாநில முதலமைச்சரின் முதன்மை செயலாளர் சன்சல் குமார், சுகாதார மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் பிரத்யம் அம்ரித் ஆகியோருக்கு இவ்விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவித்தார்.

இதையும் படிங்க: உருமாறிய கரோனா: மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.