கடந்த ஞாயிறு காலை உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் குறித்து எதுவும் ஆதாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இந்த பனிக்காலத்தில் நந்தா தேவி பனிப்பாறை எவ்வாறு உருகி உடைந்துள்ளது என்பது புதிராகவே உள்ளது.
இந்த சூழலில் பிரபல மலை சறுக்கு கேப்டன் எம்.எஸ். கோலி இது குறித்து ஒரு சுவாரஸிய சாத்தியக்கூறு இருக்கலாம் என்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பின் அங்கத்தினராக இருந்த இவர் 1965 காலகட்டத்தில் இவர்களின் குழு அங்கு அணு கருவியை புதைத்துள்ளனர். இதுகூட இந்த பேரிடருக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் கேப்டன் கோலி.
1964ஆம் ஆண்டில் சீனா, அந்நாட்டின் சின்ஜியாங்கில் உள்ள மேற்கு பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. நந்தா தேவி சிகரத்தில் அணு சோதனை நடத்தியதா என்று கண்டறிய ப்ளுடோனியம் மூலம் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த கருவியை கடும் முயற்சிக்குப் பின் புதைத்தோம்.
இது புதைக்கப்பட்ட நிகழ்வும் சாதாரணமானது அல்ல. இந்தக் கருவியை எடுத்துக்கொண்டு 25,000 அடி உயரத்தில் ஏறி சென்றபோது, அங்கு பனிப்புயல் தீவிரமாக அடித்தது. எனவே, அதை மேலே கொண்டு செல்ல முடியாமல் அங்கே அழமாக தோண்டி புதைத்துவிட்டு வந்தோம்.
இந்தக் கருவிக்கு 100 ஆண்டுகள் ஆயுள் காலம் இருப்பதால் பேரிடர் பாதிப்பு இதன் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை. அப்போது இந்த விவகாரம் ஊடகங்களில் புயலை கிளப்பியபோது அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் இது குறித்து 30 பக்கங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை அளித்தேன்.
இந்தக் கருவியை நந்தா தேவி சிகரத்தில் வைப்பதற்கு பதிலாக நந்தா கோட் பகுதியில் வைக்க வேண்டும் என்று நான் யோசனை கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. 1967ஆம் ஆண்டில் லடாக்கில் உள்ள கார்துங்கலா பகுதியில் மற்றொரு கருவியை புதைத்துள்ளோம் என்றார்.
இந்த விவகாரம் குறித்து அம்மாநில அமைச்சர் சத்பால் மஹ்ராஜ் விளக்கம் தெரிவித்துள்ளார். ப்ளுடோனியம் குறித்த விவரத்தை மாநில அரசு பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு சென்றது. உடனடியாக அதை தேடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் துணை கொண்டு விரைவில் அது கண்டறிப்படும் என விளக்கியுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் வெற்றித் திட்டங்களை வாசித்தால் நேரம் போதாது - ஓ.பி. ரவீந்திரநாத் பேச்சு