தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பெகர்பந்த் ரயில்வே காலனியில், பழமைவாய்ந்த ஹனுமன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலை அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பல ஆண்டுகளாகப் பராமரித்து வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஹனுமன் கோயில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் கூறி, ஹனுமன் கோயிலுக்கு ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஹனுமன் கோயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில், கோயிலானது ரயில்வே நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், பத்து நாட்களுக்குள் கோயிலை அப்புறப்படுத்தி, நிலத்தை ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தாங்கள் பல தலைமுறைகளாக அந்த கோயிலில் வழிபாடு நடத்தி வருவதாகவும், தற்போது அக்கோயிலை அகற்றுவதை ஏற்க முடியாது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.