பத்தனம்திட்டா(கேரளா): சபரிமலை கோயில் சன்னிதானத்திலுள்ள அனைவரும் இன்று (ஆக.04) மாலை 6 மணிக்குள் உடனடியாக கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது பக்தர்கள் கோயிலுக்குச்செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று 'நிறைபுத்தரிசி' பூஜைக்காக காலை 5:40 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 'நிறைபுத்தரிசி' பூஜையையொட்டி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அய்யப்பனை தரிசனம் செய்துவருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தச்சூழலில் பத்தனம்திட்டா மாவட்டம் முழுவதும் கன மழை காரணமாக ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கபட்ட நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பம்பை நதி ஆற்றில் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதன் காரனமாக சபரிமலை கோயிலுக்குச்செல்லும் பாதை எல்லாம் வெள்ள நீர் அதிகரித்து வருவதால் கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: குற்றால அருவிகளில் கடும்வெள்ளப்பெருக்கு; 4ஆவது நாளாக இன்றும் குளிப்பதற்குத்தடை!