ETV Bharat / bharat

புத்தாண்டை முன்னிட்டு தங்க கவசத்தில் ஜொலித்த மூலவர்.. மணக்குள விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்! - மணக்குள விநாயகர் பூஜை

Manakula Vinayagar Temple: புத்தாண்டையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இரண்டு கி.மீ தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு தங்க கவசத்தில் ஜொலித்த மூலவர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 1:06 PM IST

புத்தாண்டை முன்னிட்டு தங்க கவசத்தில் ஜொலித்த மூலவர்

புதுச்சேரி: புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதே போன்று இந்த புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் உட்புறம், வெளிப்புறத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விநாயகரை தரிசிக்க 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை பக்தர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உற்சவர் மூர்த்திக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு நர்த்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மேலும் வெளியே வரிசையில் இரண்டு கி.மீ தூரம் நிற்கும் பக்தர்கள், கோயில் உட்புறத்தில் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் பார்ப்பதற்கு வசதியாக டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து தான் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆகவே பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதை கருத்தில் கொண்டு, இன்று அர்ச்சனை செய்யப்படவில்லை. பக்தர்களுக்காக காலை ஐந்து மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடை திறந்திருக்கும்.

அதன் பின்பு 3.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும். புத்தாண்டு அன்று கோயிலில் காலை நாதஸ்வர கச்சேரியும், மாலை இசைக் கச்சேரி நடக்கிறது. பாதுகாப்பிற்காக கோயிலை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்பொது அலையில் சிக்கிய 4 பேரை தேடும் பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.