உத்தரகாண்ட்: பிரதமர் மோடியைப் போன்ற தோற்றம் கொண்ட ஹரித்வாரைச் சேர்ந்த பி.வி. சிங் என்ற நபர், உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி கோயில் அருகே தென்பட்டார். காவி நிற உடையில் பிரதமர் மோடியைப் போலவே காட்சியளித்த அந்த நபருடன், அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
பி.வி.சிங்கும் மக்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
![பிரதமரின் நகல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15567424_ut.jpg)
பி.வி. சிங் கங்கை அன்னையை தரிசனம் செய்வதற்காக வந்திருந்ததாகவும், மகிழ்ச்சியுடன் வழிபாடு நடத்திய அவர், பிறகு மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் எனவும் கங்கோத்ரி கோயில் அர்ச்சகர் சஞ்சீவ் தெரிவித்தார்.
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் தோற்றத்தைக் கொண்ட மற்றொரு நபரான அபிநந்தன் பதக், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் வசித்து வருகிறார்.