மும்பை: மும்பை - அஹமதாபாத் நெடுஞ்சாலையில் இன்று(செப்.4) மாலை சாலை விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரியின் மறைவு தொழில் மற்றும் நிதித்துறை உலகிற்கு மாபெரும் இழப்பாகியுள்ளது. இந்தியாவின் பொருளாதார சக்தியை சரியாகக் கணக்கிட்ட ஆளுமையாக அவர் திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், அவரது மரணம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். சரியாக இன்று மாலை 3 மணியளவில் மும்பை - அஹமதாபாத் நெடுஞ்சாலையில் சூரியா நதியின் மேல் அமைந்துள்ள பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது டிவைடர் மீது மோதி அவர் வந்தக் கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், இருவர் (சைரஸ் உள்பட) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யார் இந்த சைரஸ் மிஸ்திரி..? - சில குறிப்புகள்