ETV Bharat / bharat

ஏழை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் பிரதமர்! - முன்னாள் பிரதமர் தேவ கவுடா

பெங்களூரு: ஏழை மக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவ கவுடா
தேவ கவுடா
author img

By

Published : Dec 5, 2020, 1:22 PM IST

கரோனா சூழல் குறித்து ஆலோசிக்கும் வகையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஏழை மக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். நாட்டின் பெரும்பாலான மக்கள் வாங்கும் வகையில் தடுப்பூசியை குறைந்த விலையில் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டது பாராட்டுக்குரியது.

பெருந்தொற்றால் அவதிக்குள்ளான மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு பிரதமரின் அந்த பயணம் அவசியமாக கருதப்படுகிறது. வரும் வாரங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சுகாதார அமைப்புக்கு அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் கரோனா பரவல் கைமீறி போய்விடக்கூடாது. தடுப்பூசியின் மேல் உள்ள நம்பிக்கையால் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

பஞ்சாயத்து அமைப்புகளிலிருந்தே மருத்துவ தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். தினசரி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு உயர்மட்ட குழு நேரடியாக தெரிவிக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.