நடைபெற்றுவரும் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று புதுச்சேரியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவிற்குச் சென்றார்.
பின்னர், பாரதியார் காலத்தில் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படும் பாரத மாதா சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பூங்காவைச் சுற்றிப்பார்த்த அவர் அரிதான மரத்தின் விதைகளைச் சேகரித்து மரக்கன்றுகளைப் பெருகிட பூங்கா தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அங்கு மரக்கன்று நட்டார். பூங்காவில் ரயிலில் சிறிது தூரம் குழந்தைகளுடன் பயணம் செய்தார்.
இதையடுத்து, சாரம் லெனின் வீதியில் அமைந்துள்ள மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் முற்றிலும் தென்னை பனை ஓலைகளையும், தேங்காய் நார், பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடியைப் பார்வையிட்டார். முழுவதும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட மாதிரி வாக்குச் சாவடியை உருவாக்கிய மாணவர்களின் திறனை வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க : பல்லாவரத்தில் ஸ்டாலின் பரப்புரை!