பெங்களூரு: கர்நாடகா மாநிலம் விஜயநகரை சேர்ந்தவர் தஸ்லீம் ஆரிஃப். சுனக்கலில் உள்ள செல்போன் விற்பனை கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வாங்கிய விலை உயர்ந்த ஐபோன்கள் தான் டெலிவரியின் போது திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த 5ம் தேதி செல்போன் விற்பனை கடை ஒன்றில் 5 ஐபோன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச்சை தஸ்லீம் ஆரிஃப் வாங்கியுள்ளார். இதற்கான தொகையை அவர் செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பொருட்களை பெற்றுக் கொள்ள டாஞ்ஜோ (Danjo) டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் நயன் என்பவர், தஸ்லீமை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், அருண் பாட்டீல் என்பவர், தாங்கள் வாங்கிய ஆப்பிள் வாட்ச், ஐபோன்களை தம்மிடம் கொடுத்துவிட்டதாகவும், இன்னும் சில மணி நேரத்தில் தங்கள் கடைக்கு அவை அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் கூறியபடி, பொருட்கள் தஸ்லீமின் கடைக்கு வரவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்தும் பொருட்கள் வராததால் தஸ்லீமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நயன் மற்றும் அருண் பாட்டீலை தஸ்லீம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இருவரது எண்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதுதொடர்பாக போலீசில் அவர் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் வாட்ச்சுடன் தப்பிய டெலிவரி பாய்கள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதானி குழும கடன் தகவல்களை வெளியிட முடியாது - அமைச்சர் நிர்மலா சீதாராமன்!