டெல்லி: டெல்லியில் கடந்த சில நாள்களாக மோசமான நிலையில் இருந்த காற்றின் தரம் இன்று அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. முக்கியமாக காசியாபாத், பெருநகர நொய்டா பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 381ஆக உள்ளது. கடந்த இரு நாள்களின் முறையே அவை 367, 268ஆக இருந்தது.
இன்று அதிகபட்சமாக 12 கி.மீ. வேகத்தில் குளிர் காற்று வீசும். குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லியில் வரும் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதிவரை காற்றின் தரம் மிகுந்த அபாய கட்டத்தை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் காற்றின் தரம் இந்த வாரம் உச்சத்தை தொடும்