டெல்லி: தலைநகரில் காற்றின் தரம் இன்னும் சீராகவில்லை என ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) சான்றுகளின்படி, காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட குறியீடு 'சிறப்பானது', 51இல் இருந்து 100 வரையிலான குறியீடு 'திருப்திகரமானது'. 101 மற்றும் 200 இடைப்பட்ட பகுதி 'மிதமானது'. 301க்கும் 400க்கும் இடையே 'மிகவும் மோசமானது'. 401க்கு மேலே இருந்தால் 'கடுமையானது' என கருதப்படுகிறது.
இன்று (நவ., 8) காலை நேரத்தில் நகரின் காற்று மாசுக் குறியீடு 436ஆக (கடுமையானது) பதிவாகியுள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட, எதிர்பார்த்ததைவிட அதிகளவில் தீ பற்றவைக்கப்பட்டதன் காரணமாக இந்த மாசு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வரும் நாட்களில் காற்று மாசின் அளவு மிகவும் மோசமானது முதல் கடுமையான அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகப் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 466 ஆகவும், பூசா சாலையில் காற்று மாசுக் குறியீடு 427 ஆகவும், ஐஐடி டெல்லியில் 441 ஆகவும், லோதி சாலையில் 432 ஆகவும் காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி காற்று மாசு: 114 டேங்கர்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!