டெல்லியில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று குறைவாகப் பதிவாகிறது. இதனால் அம்மாநில அரசு படிப்படியாகப் பல்வேறு தளர்வுகளை அளித்துவருகிறது.
அந்தவகையில் கடந்த மூன்று மாதங்களாக, அதாவது சுமார் 105 நாள்களுக்குப் பிறகு டெல்லி உயிரியல் பூங்கா நேற்றுமுதல் (ஆக. 1) திறக்கப்பட்டது. மேலும் இங்கு வரும் பார்வையாளர்கள் காலை 8 முதல் 12 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 5 வரையும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறந்த டெல்லி உயிரியல் பூங்காவில் முதல் நாளிலேயே சுமார் 92 விழுக்காடு டிக்கெட் விற்பனையாகியுள்ளது.
மேலும் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இதற்கான நுழைவுச்சீட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டு குட்டிகளை ஈன்ற ‘பாராசிங்கா’ மான்!