டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள காளி பாரி வளாகத்தில் பிரசித்திப் பெற்ற பிர்லா மந்திர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆக்ரோஷத்துடன் வந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த ராகு கேது சிலைகளை உடைத்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் டெல்லி காவல் துணை ஆணையர் தீபக் யாதவ் கூறுகையில், “ஜனவரி 29 அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
அன்று பிர்லாமந்திர் கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று அங்கிருந்த ராகு கேது சிலைகளை உடைத்துள்ளார். அந்த இளைஞர் மீது மந்திர் மார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாதகத்தால் ஆத்திரமடைந்த இளைஞர்
குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரின் வீட்டில் உள்ளவர் சில நாள்களுக்கு முன் இறந்தார், அதற்குக் காரணம் ராகு கேது திசைகளின் இடப்பலன்கள் என ஒரு ஜோசியர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மனமுடைந்த நிலையில் வந்த இளைஞர் கோயிலின் சிலைகளை உடைத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தொடர்ந்து இரண்டாவது மாதமாக சிலிண்டர் விலை குறைப்பு