டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "வரும் 2048ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளை நாட்டின் தலைநகரில் நடத்த ஏலம் கேட்கப்படும்.
அதற்கான தொலை நோக்கு பார்வை கொண்ட திட்டம் நிதிநிலை அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது" என்றார்.
டெல்லி சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இன்று தாக்கல் செய்தார். 2047ஆம் ஆண்டுக்குள், தனி நபர் வருமானத்தை சிங்கப்பூர் அளவுக்கு உயர்த்துவதையே அரசு லட்சியமாக கொண்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.