யமுனா ஆற்றின் மேல்நிலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததன் காரணமாக யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
குறிப்பாக, ஹரியானாவில் உள்ள ஹாத்னிகுண்ட் அணையிலிருந்து யமுனா நகர் மாவட்டத்திலுள்ள யமுனா ஆற்றில் கூடுதலாகத் நீர் திறந்துவிடப்படுவதால் நீர்வரத்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஹாத்னிகுண்ட் பகுதியில் இருந்து 352 கன அடி நீர் மட்டும் திறந்துவிடப்படும் நிலையில், தற்போது 17,827 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட்.1) காலை நிலவரப்படி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவான 205.33-ஐ நெருங்கியுள்ளது. தற்போது, ஆற்றின் நீர் மட்டம் 205.30ஆக உள்ளது.
இதன்காரணமாக, ஆற்றின் அருகில் குடியிருக்கும் 100 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டில் யமுனா ஆற்றின் நீர்மட்டம் 207.32 மீட்டா் வரை சென்றது. அதேபோல, 1978ஆம் ஆண்டில் யமுனா ஆற்றின் நீர் மட்டம் 207.49 மீட்டராக உயர்ந்தது தான் அதிகபட்ச நீர் மட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூஞ்ச் எல்ஓசியில் கண்ணிவெடி... கண்டுபிடித்த ஜூலி!