டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை டெல்லி அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து, அவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தியை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருட்களை அறிமுகப்படுத்தும் வகையில், ஜூலை 1ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 23 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியராக தேர்வான எம்எல்ஏ!