ETV Bharat / bharat

Explained: நாடாளுமன்றத்தில் நிறைவேறிய டெல்லி நிர்வாக திருத்த மசோதா : அதிகாரம் தொடர்பான முக்கிய அம்சங்கள்...!

மாநிலங்களவையில் நிறைவேறிய டெல்லி நிர்வாக திருத்த மசோதா, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்கவும், டெல்லியின் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கவும் வழி செய்கிறது. இது, டெல்லி அரசின் செயல்பாடுகளை துணைநிலை ஆளுநர் கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதால் நிர்வாகத்தில் மேலும் சிக்கல்கள் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Delhi
நாடாளுமன்றம்
author img

By

Published : Aug 8, 2023, 12:28 PM IST

டெல்லி: டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையிலும், துணைநிலை ஆளுநருக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கும் வகையிலும் மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி நிர்வாக திருத்த மசோதா நேற்று(ஆகஸ்ட் 7) மாநிலங்களவையில் நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன. அதேநேரம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. மாநிலங்களவையில் நிறைவேறியதையடுத்து இந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த டெல்லி நிர்வாக திருத்த மசோதா குறித்த முக்கிய விபரங்களை விரிவாகப் பார்க்கலாம்...

அமித்ஷா உறுதி: டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இந்த மசோதா தலைநகர் டெல்லியில் ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வரும் என உறுதி அளித்தார்.

என்சிசிஎஸ்ஏ: டெல்லி நிர்வாக திருத்த மசோதா, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் (NCCSA)-வை உருவாக்க வழி செய்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக முதலமைச்சரும், செயலாளராக டெல்லியின் தலைமைச் செயலாளரும் பதவி வகிப்பார்கள். டெல்லியில் குரூப் ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களை செய்யும் அதிகாரம் இந்த ஆணையத்திற்கு உள்ளது. மேலும், இந்த ஆணையத்தில் டெல்லியின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்படுவார். குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என இந்த நிர்வாக திருத்த மசோதா கூறுகிறது.

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை: டெல்லி நிர்வாக திருத்த மசோதாவின்படி, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் இரண்டு உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவரான முதலமைச்சர் இல்லாத நேரத்திலும், இரண்டு உறுப்பினர்களும் கூட்டத்தை நடத்த முடியும்.

துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்: தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தின் பரிந்துரைகளை அங்கீகரிக்கவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்று இந்த மசோதா கூறுகிறது. ஆணையத்தால் எடுக்கப்பட்ட முடிவு சட்டவிதிகளுக்கு பொருந்தவில்லை என்றால், இது தொடர்பாக துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

மேலாண்மை: இந்த மசோதாவின்படி, டெல்லி அரசாங்கத்திற்கு நீதிமன்றம், பிற மாநில அரசுகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய அல்லது சிக்கலான அனைத்து விஷயங்களும் சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

டெல்லி நிர்வாகம் மீது கட்டுப்பாடு: டெல்லி அரசின் செயல்பாடுகள், டெல்லி நிர்வாக திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதை தலைமைச் செயலாளரும், துறை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும். அச்சட்டத்தை மீறி ஏதேனும் நடந்தால், அது முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரின் கவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக உடனடியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

அதிகாரிகள், வாரியங்கள், ஆணையங்கள்: டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, அதற்கு தேவையான அதிகாரிகள், ஆணையங்கள், வாரியங்கள் மற்றும் குழுவை துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்வார்.

என்சிசிஎஸ்ஏவுக்கு பொறுப்புக்கூறல் இல்லை: டெல்லி நிர்வாக திருத்த மசோதா, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம், தனது நிர்வாகம் தொடர்பாக ஆண்டறிக்கையை மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை நீக்கியுள்ளது. இது ஆணையத்தின் பொறுப்பை நீக்கும் நடவடிக்கை என ஆம்ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில், டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், பிஜு ஜனதா தளம் எம்பி சஸ்மித் பத்ரா, அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் ஆதரவாக கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தாங்கள் கையெழுத்திடவில்லை என ஐந்து எம்பிக்களும் மறுத்து உள்ளனர். குறிப்பிட்ட தீர்மானத்தில் தனது கையெழுத்து போலியாக போடப்பட்டிருப்பதாக தம்பிதுரை குற்றம் சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க: Rajya Sabha: டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.