ETV Bharat / bharat

டெல்லியில் மதுபானம் டோர் டெலிவரி - வியாபாரிகள் இன்று முதல் விண்ணப்பம் - டெல்லி மதுபானம்

மதுபானம் டோர் டெலிவரி செய்ய விரும்பும் வியாபாரிகள், நிறுவனங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Delhi
மதுபானம் டோர் டெலிவரி
author img

By

Published : Jun 11, 2021, 1:24 PM IST

டெல்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, மதுபானங்களை நேரடியாக வீட்டிலேயே விநியோகம் செய்ய கடந்த ஜூன் 1 ஆம் தேதி டெல்லி அரசு அனுமதி அளித்தது.

இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்து மதுபானக் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய முடியாது. எல்-13, எல்-14 வகை உரிமம் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் மட்டுமே தங்கள் கடைகளுக்கு மொபைல் செயலி, இணையதளம் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய முடியும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுபானம் டோர் டெலிவரி செய்ய விரும்பும் வியாபாரிகள், நிறுவனங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மதுபானம் டோர் டெலிவரி இன்று முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டிற்கு வருகிறது.

இருப்பினும், வியாபாரிகளுக்கு அனுமதி கிடைத்த பிறகே மதுபானங்களை டோர் டெலிவரி செய்திட முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.