ETV Bharat / bharat

சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதலுக்கு வாய்ப்பு! - சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதலுக்கு வாய்ப்பு

செங்கோட்டையில் 4 ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படவுள்ளது. காவலர்களுக்கு ட்ரோன் தாக்குதலை சமாளிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Delhi Police receives intel alerts of drone strikes during I-Day

author img

By

Published : Jul 20, 2021, 5:34 PM IST

டெல்லி: புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து டெல்லி போலீஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் நிதிபெறும் பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்துள்ளன.

புலனாய்பு நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, ட்ரோன், ஏர் பலூன் உள்பட அனைத்து பறக்கும் பொருள்களுக்கும் தடை விதித்து டெல்லி காவல் ஆணையர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாது அனைத்து மாவட்ட காவல் துணை ஆணையரையும் தொடர் ரோந்து பணியில் ஈடுபடும்படி கூறியிருக்கிறார்.

புலனாய்வு நிறுவனங்கள் அளித்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதியும் டெல்லியில் தாக்குதல்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மிரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட நாள் அந்த வேளையில் வருகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புலனாய்வு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

செங்கோட்டை, நாடாளுமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்து பணிக்கு 30 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

செங்கோட்டையில் 4 ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படவுள்ளது. காவலர்களுக்கு ட்ரோன் தாக்குதலை சமாளிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சந்தேகப்படும்படி நடவடிக்கைகளை கண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் சூடுபிடிக்கும் பெகாசஸ்: இரு அவைகளும் தொடர் ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.