இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானின் ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் முகமது ரஹீம் வர்தக், தனது மனைவி கோப்ரா வர்தக்கின் சிகிச்சைக்காக இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது.
புற்றுநோயாளியான கோப்ரா டெல்லியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சையின்போது, அவர் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டார். இவர், தன் கணவர் இறந்த செய்தி தெரியாமல் ஏப்ரல் 24 அன்று ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் உதவியுடன் தனது நாட்டுக்குச் சென்றார்.
இறந்த ராணுவ அலுவலரின் உடலை உடற்கூராய்வு செய்தபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்தது தெரியவந்ததைது. தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களுக்கு இவர் இறப்பப் பற்றி கூறி உடலை தகனம் செய்ய தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக டெல்லிக்கு வர இயலாமையை குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து டெல்லி காவல் துறையினர் இந்தச் செய்தியை ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு தெரிவித்த பின்னர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.