டெல்லி: கிழக்கு டெல்லி சக்கர்பூர் பகுதியில் ஐந்து பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை ஆணையர் பிரமோத் குஷ்வாகா தலைமையிலான சிறப்புப் படைப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்களைக் கைதுசெய்து, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இது குறித்து பேசிய பிரமோத் குஷ்வாகா, "சக்கர்பூர் பகுதியில் ஐந்து பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்தோம்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கைதுசெய்தோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஐந்து பேரில் இருவர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பதும், மீதமுள்ள மூவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம். இவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) மற்றும் போதைப்பொருள் விவகாரங்களில் தொடர்புடையதாகவும் டெல்லி காவல் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்" என்றார்.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் பயங்கரவாதி கைது; துப்பாக்கி, வெடிபொருள்கள் பறிமுதல்!