டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் வே இன்று(ஏப்.1) முதல் செயல்பாட்டிற்கு வந்தது என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நான்கு கட்டமாக நிறைவேற்ற இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் தூரம் 82 கி.மீ ஆகும். இதில் 60 கி.மீ எக்ஸ்பிரஸ் வே ஆகவும், 22 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது.
ரூ.8,346 கோடி இந்தத் திட்டத்தின் கீழ் 24 பாலங்கள், 10 மேம்பாலங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தனது மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. இந்த எக்ஸ்பிரெஸ்வே திட்டத்தின் மூலம் டெல்லி மற்றும் மீரட் நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 180 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்களாகக் குறைந்துள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19: சமாளித்து உயர்வு கண்ட ரயில்வே துறை