புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியை ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே அவ்வப்போது முரண்கள் ஏற்படுவதுண்டு. வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை கூட ஆளுநர் நிறுத்திவைத்துள்ளார் என அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கிடையில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் (Anil Baijal) ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1969 ஐஏஎஸ் பேட்ஸ் ஆன அனில் பைஜால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி டெல்லி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். டெல்லி உள்துறை அமைச்சகத்திலும் அனில் பைஜால் பொறுப்பு வகித்தவர் ஆவார். இவரின் ராஜினாமா முடிவு டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதல் போக்கு இருந்தாலும் இவரின் ராஜினாமாவுக்கு முழுமையான காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதையும் படிங்க: டெல்லி அரசாங்கம் மருத்துவ வசதிகளில் கவனம் செலுத்த ஆளுநர் வேண்டுகோள்