டெல்லி: ஹாலிவுட் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான பியர் கிரில்ஸுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பியர் கிரில்ஸின் 'கெட் அவுட் அலைவ் வித் பியர் கிரில்ஸின்' காப்புரிமை தொடர்பாக இந்திய உள்ளடக்கத்தை உருவாக்கிய அர்மான் ஷர்மா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 2009ஆம் ஆண்டு ‘கெட் அவுட் அலைவ் வித் பியர் கிரில்ஸ்’ என்ற யோசனையை டிஸ்கவரி சேனலுக்கு தான் வழங்கியதாக அர்மான் ஷர்மா கூறுகிறார்.
அந்த நேரத்தில் டிஸ்கவரி, அவரது யோசனையை நிராகரித்துவிட்டு, பின்னர் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக அர்மான் ஷர்மா கூறுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மற்றும் நேஷனல் ஜியோகிராஃபி சேனல்களுக்கும், நடிகர் பியர் கிரில்ஸுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமித் பன்சால் அமர்வு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி, அடுத்த விசாரணையில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. அர்மான் ஷர்மாவின் மனு மீது, இந்த விவகாரத்தில் பியர் கிரில்ஸ் மட்டுமின்றி டிஸ்கவரி சேனல் தயாரிப்பாளர் வார்னர் பிரதர்ஸ், நேஷனல் ஜியோகிராபி சேனல் மற்றும் ஹாட்ஸ்டார் ஆகியோருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2009ஆம் ஆண்டு டிஸ்கவரி சேனலின் முன், தனது திட்டத்தை முன்வைத்ததாக அர்மான் ஷர்மா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு நாள் எதேச்சையாக ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோதுதான், இந்த திட்டம் 2013ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவது அர்மான் ஷர்மாவுக்கு தெரியவந்தது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் முதல் இந்தியப் பிரதமர் வரை, பியர் கிரில்ஸ் அழைத்துச் சென்று பங்கேற்க வைத்துள்ளார். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்ட பியர் கிரில்ஸின் நிகழ்ச்சியான ’கெட் அவுட் அலைவ் வித் பியர் கிரில்ஸ்’, நன்கு அறியப்பட்ட நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பல்வேறு பிரபலங்களும், குறைந்தபட்ச ஆதாரங்களுடன் காட்டில் வாழும் முறைகள் மற்றும் எப்படி வாழ்வது என்பது பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.
அவரது நிகழ்ச்சியில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரை பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ், உலகின் பல்வேறு பள்ளத்தாக்குகள் மற்றும் காடுகளில் சுற்றித் திரிகிறார் மற்றும் பழமையான வழியில் உயிரைக் காப்பாற்றுவது பற்றி மக்களுக்குத் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: பிகினி கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை...