ETV Bharat / bharat

இந்து தெய்வங்கள் குறித்து அருவருப்பு கருத்து: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ் - ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ்

இந்து தெய்வங்கள் தொடர்பான ஆட்சேபகரமான கருத்து குறித்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். சில இன்ஸ்டாகிராம் பயனர்கள் முன்வைத்த 'அருவருப்பான', 'ஆட்சேபகரமான' இடுகைகளுக்கு எதிராக வழக்கறிஞர் ஆதித்யா சிங் தேஷ்வால் தாக்கல்செய்த மனுவை விசாரித்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்து தெய்வங்கள் குறித்து அருவருப்பு கருத்து: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ்

author img

By

Published : Jun 15, 2021, 11:33 AM IST

Updated : Jun 15, 2021, 11:49 AM IST

டெல்லி: இந்துக் கடவுள்கள் குறித்த அருவருக்கத்தக்க, ஆட்சேபகரமான பதிவை நீக்கக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவை இது குறித்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

சில இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்துக் கடவுள்கள், தெய்வங்கள் குறித்து முன்வைத்த 'அருவருப்பான', 'ஆட்சேபகரமான' இடுகைகளை நீக்க வலியுறுத்தி வழக்கறிஞர் ஆதித்யா சிங் தேஷ்வால் மனு தாக்கல்செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பல்லி, இது குறித்து அடுத்த விசாரணையின்போது (ஆகஸ்ட் 16) இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னதாக மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஜி. துஷார் ராவ், இன்ஸ்டாகிராம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 ஐ அதன் உண்மையான அர்த்தத்தில் பின்பற்றத் தவறிவிட்டது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்து தெய்வங்கள் குறித்து அருவருப்பு கருத்து

இந்த மனு தொடர்பாக பதிலளிக்க சம்பந்தப்பபட்டவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அந்தக் கருத்து ஏற்கனவே அதன் தளத்திலிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021இன் அடிப்படையில் ஒரு குறைதீர்க்கும் அலுவலர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, மனுதாரின் மனுவுக்குப் பதிலளிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Last Updated : Jun 15, 2021, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.