டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பிஞ்ச்ரா டோட் அமைப்பை (கல்லூரி பெண்கள்) சமூக செயற்பாட்டாளர்கள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் ஆகியோருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
வடகிழக்கு டெல்லியில் கடந்தாண்டு நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி காவலர்கள் பிஞ்ச்ரா டோட் அமைப்பை (கல்லூரி பெண்கள்) சமூக செயற்பாட்டாளர்கள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஆசிப் இக்பால் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதில் நர்வால் மற்றும் கலிதா ஆகியோர் கடந்தாண்டு மார்ச் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் தங்களுக்கு பிணை வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் சித்தார்த் மிர்துல் மற்றும் அனூப் ஜெய்ராம் பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூவருக்கும் ரூ.50 ஆயிரம் தனிநபர் பத்திரம் பெற்று, பிணை வழங்கி உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் தங்களின் பாஸ்போர்டை சமர்பிக்க வேண்டும் என்றும், காவலர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினர். மேலும், வழக்கு விசாரணை சாட்சிகள் அல்லது வழக்கின் உண்மைகளை அறிந்த பிற நபர்களுடன் தொடர்பு கொள்ளவோ, பார்வையிடவோ அல்லது வாக்குறுதியை வழங்கவோ கூடாது என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து விசாரணையிலும் பாரப்பட்சம் காட்டக் கூடாது என்று காவலர்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “போராட்டம் என்பது சட்டவிரோதமோ அல்லது பயங்கரவாதமோ அல்ல” என்றும் கூறினர்.