தலைநகர் டெல்லியில் வரும் 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீடிக்க படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரண்டாம் மழை காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாள்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த ஊரடங்கு திங்கள்கிழமை காளையுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில் அதை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு குறைந்துவரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலைமை சீரடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.